Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பணியில் இருந்த ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு .

0

'- Advertisement -

திருச்சியில் பணியில் இருந்த

ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு .

கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை .

திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 56) இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே டிஆர்எம் அலுவலகத்தில் ரெயில் என்ஜின் கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்து வந்தார்.

 

இந்நிலையில் கடந்த 2 ந்தேதி சங்கரலிங்கம் பணியில் இருந்த போது அவரது உடல் முழுவதும் திடீரென ஒரு விதமான சொறி ஏற்பட்டது. இதையடுத்து உடனே அவர் தனது நண்பர்கள் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிக்கு சென்றார். அங்கு சங்கரலிங்கம் முதல் உதவி சிகிச்சை பெற்று விட்டு பிறகு மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்பொழுது அவர் திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஏதாவது விஷப் பூச்சிகள் கடித்ததா? அல்லது சாப்பிட்ட உணவால் அலர்ஜி எதுவும் ஏற்பட்டதா என்பது மர்மமான முறையில் உள்ளது. சங்கலிங்கம் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.