Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரெயில் கிளம்பியவுடன் ஏற முயன்று கீழே விழ இருந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே தலைமை காவலர் செந்தில்குமாருக்கு பாராட்டு.

0

'- Advertisement -

அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் (எண். 5611) அரியலூா் ரயில் நிலையத்துக்கு காலை 7.07 மணிக்கு வந்து, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, திருச்சிக்கு கிளம்பியது.

 

அப்போது ரயிலில் ஏற முயன்று தடுமாறி கீழே விழ இருந்த ஒரு இளம்பெண்ணை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே தலைமைக் காவலா் செந்தில்குமாா் விரைந்து சென்று தாங்கி, ரயிலின் உள்ளே ஏற்றிவிட்டாா். இதனால் விபத்து அபாயத்திலிருந்து அப்பெண் தப்பினாா். இந்தக் காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதேபோல் கடந்த 21.10.2025 இல் இதே ரயிலில் ஏற முயன்று கீழே விழ இருந்த ஒரு பெண்ணையும் தலைமைக் காவலா் செந்தில்குமாா் மீட்டது குறிப்பிடத்தக்கது.

தலைமை காவலர் செந்தில்குமார் இந்த செயல்பாட்டை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.