திருச்சி உறையூரில்
மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது.
திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 26). இவரது மனைவி ஜனனி (வயது 23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
உதயகுமார் அடிக்கடி தனது மனைவி ஜனனியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 24ந்தேதி ஜனனி உறையூர் பாண்டமங்கல புது வெள்ளாளர் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற உதயகுமார் ஜனனியை தகாத வார்த்தைகளால் திட்டி மனைவி மற்றும் மகளை தாக்கியுள்ளார். இதில் காயம் காயம் அடைந்த மனைவி ஜன்னலை மற்றும் மகள் இருவரும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து ஜனனி அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து உள்ளனர்.
இதற்கிடையில் மனைவி தாக்கியதில்?
லேசாக காயமடைந்த உதயகுமாரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

