திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலீசாரின் அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம் செல்போன்கள் பறிமுதல் .
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம் செல்போன்கள் பறிமுதல் .
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில்
சிறை முகாமில் செல்போன் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் தேதி திருச்சி மாநகர போலீசார் திடீரென்று சிறை முகாம் வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அங்குள்ள அறைகளில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்பொழுது சிறப்பு முகாம் சிறை வளாகத்தில் இருந்த 12 செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச், மோடம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கே கே நகர் உன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து
சிறை முகாமிற்குள் செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

