திருச்சியில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆயத்த மாநில மாநாடு நடைபெற்றது.எஸ் ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆயத்த மாநில மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த (எல்.பி.எப்) அகில இந்திய தலைவர் கி.நடராஜன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.சவுந்தரராஜன், மாநில தலைவர் ஜி.சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, எச்.எம்.எஸ் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி, ஐ.என்.டி.யூ.சி மாநில துணைத்தலைவர் டி.வி.சேவியர், ஏ.ஐ.சி. சி.டி.யு மாநில பொதுச்செயலாளர் க.ஞானதேசிகன், எல்.எல்.எப் மாநில பேரவை அமைப்பாளர் க. பேரறிவாளன், யூ.டி. யூ.சி மாநில பொதுச் செயலாளர் அ.சேக்கிழார், எஸ்.கே.எம் மாநில ஒருங்கிணைப்பாளர் க.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் மாரியப்பன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், ஏ.ஐ.யூ.டி.சி வி. சிவக்குமார், டி.யு.சி.சி எஸ்.மாயாண்டி, எம்.எல்.எப் இரா. அந்திரிதாஸ், டபிள்யூ.பி.டி.யு.சி சம்பத், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் எல்.பி.எப் குணசேகரன், சி.ஐ.டி.யு ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், எஸ்.கே. எம் சிவசூரியன், ஏ.ஐ.சி.சி.டி.யு அருண்குமார், எச்.எம். எஸ் ஞானதுரை, ஐ.என்.டி.யு.சி வெங்கட் நாராயணன், எல்.எல்.எப் விஜய் பாலு, யு.டி.யு.சி சிவசெல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆயத்த மாநாட்டு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய தொ.மு.ச நடராஜன் பேசியதாவது:-
திருத்தப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பில் ஊதிய வன்முறையில் குழப்பம் நிலவுகிறது. மத்திய அரசு குழு கூறுவதை மாநில அரசு கேட்டு நடக்க வேண்டும் என்கிறது. அபாயகரமான இந்த சட்டத் தொகுப்பு அவசரகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தமிழகத்தில் அமல்படுத்தாமல் தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. பா.ஜ.க தலைமையிலான அரசு தமிழகத்தில் அமைந்தால் மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை தமிழகத்தில் எளிதாக அமல்படுத்தி விடும். இதை யாரும் தடுக்க முடியாத சூழல் உருவாகும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் சங்க தலைவர் கே. வி. இளங்கீரன் பேசுகையில்:- தனது பணக்கார நண்பர்களுக்காக பிரதமர் மோடி இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தனியார்மயத்தை நோக்கி இந்த நாடு போய்க் கொண்டிருக்கிறது. இவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம் மற்றும் விதை சட்டம் தொழிலாளர் வதைக்கும் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றார்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு புதிய சட்டத்தால் எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்று விளக்கியவர், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் ஒன்று திரண்டு நிற்போம் என்றார்..
கூட்டத்தில் பேசிய எஸ் ஆர் எம்.யூ துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் ரயில்வே துறை தனியார் மாயமாக்கல் குறித்து பேசிய போது கூறியதாவது:-
உத்தரவாதத்துடன் பாதுகாப்பான பணியே தரும் ஒரே துறை ரயில்வே துறை தான்.அகில இந்திய அளவில் ரயில்வே சங்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரசேகரன் மற்றும் ராஜா ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
தனியார் மையம் என்பது லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவது.திருச்சியில் தனியார் மருத்துவத் துறை அப்போலா மருத்துவமனை,காவேரி மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் தினமும் பல லட்சம் சம்பாதித்து வருகிறது.
ஆனால் பப்ளிக் சென்டர் எனப்படும் அரசு பொது மருத்துவமனை பொது மக்களுக்கு சேவை அளித்து வருகிறது.
இந்தியாவிலேயே வரும் வருமானத்தில் அதிக லாபத்தை ஊதியமாக தருவது ரயில்வே துறை மட்டும்தான்.அரசு துறையில் பல குறைகள் இருந்தாலும் இந்திய ராணுவத்திற்கு ரயில்வேத்துறை லாபத்தில் பட்ஜெட் தான் ஒதுக்கப்பட்டது.
1975 ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 60 கோடி ஆனால் தற்போது இந்திய மக்கள் தொகை 146 கோடி. 1977 ல்ரயில்வே துறையில் 19 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிய வந்தனர்.இப்போது ஐந்து மடங்கு மக்கள் தொகை பெருகி உள்ள நிலையில் ரயில்களும் ஐந்து மடங்கு பெரிய உள்ளது.ஆனால் 19 லட்சம் இன்று தேய்ந்து 12 லட்சம் ஊழியர்களாக அதுவும் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.மத்திய அரசின் இந்த ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கலை கண்டிது தான் நமது எஸ் ஆர் எம்.யூ. தலைவர்கள் போராடி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், பெண்கள்,வயதானவர்கள் எனது தனித்தனியாக டிக்கெட் எடுப்பதற்கு கவுண்டர்கள் இருந்தது ஆனால் தற்போது அவை எதுவும் செயல்படவில்லை. ஜ ஆர்டி சி மூலம் முன்பதிவு செய்வதால் ரூ.50 ரூபாய் கட்டணம் நமக்கு தெரியாமலேயே நம் அதிகமாக செலுத்தி வருகிறோம்.
இந்தியாவில் தினம் தோறும் 24 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.தினமும் 1.8மக்கள் பயணம் செய்கிறார்கள் பண்டிகை காலங்களில் இது இருமடங்காக உயரும். 99சதவீதம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளக்கூடிய ரயில்வே துறையை மத்திய அரசு தனியார் மயமாக முயன்று வருகிறது.ரயில்வே துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை தனியார் பஸ் ஸ்டாண்ட் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அனைத்து வெயில் உள்ள பல பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் இனி யாரும் ரயில்வே துறையில் பணிக்கு சேர முடியாது.எனவே மத்திய அரசு உடனடியாக ரயில்வே துறையை தனியார் மயமாக்கு எண்ணத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
இக்கூட்டத்தில் மத்திய மோடி அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், பிப்ரவரி 12 அன்று நடைபெற உள்ள, அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கான, ஆயத்த மாநில மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது: அவை …
மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, பொதுமக்கள் விரோத, மற்றும் ஜனநாயக விரோத போக்குகளை கைவிட வேண்டும்.
நூற்றாண்டு காலம் போராடி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் -பின்பும், உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் சட்டத்தில் 29 சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக்கியதன் மூலம், 80 சதவிகித தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே தள்ளுவதோடு, இந்நாட்டு – பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும், இலகுவாக வணிகம் செய்வதை நோக்கமாக கொண்ட, சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
விவசாயிகளை பாதிக்கும், விதை சட்ட முன் வடிவை கைவிட வேண்டும். விளைப்பொருட்களுக்கு உரிய ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மின்சார உற்பத்தி – விநியோகம் தனியார் மயமாக்கும் நோக்கோடும், விவசாயிகள், விசைதறியாளர்கள், ஒரு விளக்கு பயன்பாட்டாளர், என அனைத்து தரப்பினரையும், பாதிக்கும் மின்சார சட்ட திருத்த சட்ட முன்வடிவை திரும்பப்பெற வேண்டும்.
மகாத்மா காந்தி, ஊரக வேலை உறுதி சட்டத்திலிருந்து, தேச தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கியதோடு, மத்திய அரசு, தனது பங்களிப்பை குறைத்து, மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையை கூடுதலாக்குவதை கண்டிப்பதுடன், மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர் குலைப்பதை கண்டிப்பதுடன், மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை, முன்பிருந்த நிலையில் செயல்படுத்த வேண்டும்.
காப்பீட்டு துறையில், 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, கைவிட வேண்டும்.
அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.
மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

மத்திய அரசு, கடந்த 21-ந் தேதி அறிவித்த லேபர் கோடு (தொழிலாளர் நல சட்ட திருத்தம்) அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

