திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை
கல்லால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப் பதிவு.
பாரின் உள் வாந்தி கூடாது என கூறியதால் ஆத்திரம்.
திருச்சி ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்.இவரது மகன் சூசை மரியம் பிச்சை.இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று பணியின் போது திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அங்கே மது அருந்த வந்து உள்ளார். மது அருந்தி முடித்த நிலையில் ஜெயசீலன் திடீர் என பாரின் உள்ளேயே வாந்தி எடுத்துள்ளார்.அப்போது சப்ளையர் சூசை மரியம் பிச்சை ஜெயசீலனிடம் இங்கே வாந்தி எடுக்காதீர்கள் வெளியே சென்று வாந்தி எடுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயசீலன் சப்ளையர் சூசை மரியம் பிச்சையை தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சூசை மரியம் பிச்சை கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தாயுமான் ஜெயசீலன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

