கணவன் மனைவியிடம் பரிகாரம் செய்வதாக கூறி ரூ.16 லட்சம் ஏமாற்றிய ஶ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி புகார்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது 54) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார் .அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அன்ன காமாட்சி சித்தர் பீடத்திற்கு பவுர்ணமி பூஜையின் போது நான் சென்று வந்தேன். இந்நிலையில் கடந்த 16.07.19, ம் ஆண்டு நான் பௌர்ணமி பூஜைக்கு சென்றபோது, ஸ்ரீரங்கம் மேலூர் காவேரி தெற்கு கரைப் பகுதியைச் சேர்ந்த ராஜாளி பெரியசாமி என்ற அன்ன காமாட்சி சித்தர் அறிமுகாமானார். இவர் எனது
வீட்டு நிலத்தில் சூனியம் இருக்கிறது என்றும், கணவருக்கு மரண கண்டம் இருப்பதாகவும் கூறினார்.
இதனை சரி செய்ய பரிகாரம் உண்டு. இதற்காக நீங்கள் நல்ல செலவு செய்தால், சூனியம் நீங்கும்” என்று கூறினார். இதையடுத்து அவரது வார்த்தைகளை நம்பி நானும் எனது கணவர் ரவீந்திரனும் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டம்.
பின்னர் இருவரும் வரகனேரில் உள்ள சித்தர் நிலத்தை வாங்க ஒப்பு கொண்டோம்.
. இதற்காக, நாங்கள் இருவரும் சித்தரிடம் ரூ. 16 லட்சம் பணம் கொடுத்தோம். ஆனால் அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை மற்றும் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார் என புகார் மனுவில். கூறியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஶ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாளி பெரியசாமி சித்தர் மற்றும் தங்கம் என்ற பெண் மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி பிரிவின் கிழ் வழக்கு செய்யப்பட்ட சம்பவம் ஶ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

