Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜெனட் மருத்துவமனைக்கு தடை.15 வயது சிறுமிக்கு பிரசவம்.பிரசவத்தில் பல உயிரிழப்பு.முறைகேடாக சம்பாதித்த பணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம்.

0

'- Advertisement -

திருச்சி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் ஜெயராணி (வயது 30) என்பவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினர். அந்த மருத்துவமனையில மகேப்பேறு மரணங்கள் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, உரிய விசாரணை நடத்த திருச்சி மாவட்ட ஆட்சியா் சரவணன் உத்தரவிட்டாா்.

சிறப்பு வருவாய்க் கோட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமையில திருச்சி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவு தலைவா் எட்வினா வசந்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினா் மருத்துவமனையில் விசாரணை நடத்தினா்.

 

விசாரணையின் முடிவில், மருத்துவமனையில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ மேலாண்மையின்றி இருப்பதாகவும், நோயின் தீவிரத் தன்மையை முன்கூட்டியே அறியாமல் இருந்ததால் மகப்பேறு இறப்புகள் அதிகமானது என தெரியவந்தது. இது குறித்து அந்த குழுவினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் சரவணன் அறிவுறுத்தலின்படி,

அந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்திற்கு உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதித்து சுகாதார துறை அதிகாரிகள உத்தரவிட்டுள்ளனர்.

15 வயது சிறுமிக்கு ஜெனட் மருத்துவமனையில் தான் பிரசவம்.

இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி திமுக வட்ட செயலாளர் காளை உள்ளிட்ட பதினைந்து பேர் பயந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி 2021ம் ஆண்டு கர்ப்பமானார்.

இதை தொடர்ந்து அந்த சிறுமியை அவரது தாயார் மற்றும் தாத்தா இருவரும் இந்த ஜெனட் மருத்துவமனையில் தான் பிரசவத்திற்கு சேர்த்துள்ளனர்.

ஒரு பெண் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவரது கணவர் பெயர் ஆதார் கார்டு உடன் பதிவு செய்ய வேண்டும்,கர்ப்பமான பெண் 18 வயது பூர்த்தி அடைந்தவர் தான் என்பதற்கு சான்று தர வேண்டும்,இவை முறைப்படி அளித்தால் தான் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படும்.

ஆனால் முறைகேடாக, கர்ப்பத்தை கலைப்பது,கர்ப்பத்தில் இருப்பது ஆணா,பெண்ணா என பார்ப்பது,18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது அனைத்தும் பெரும் தொகையை பெற்றுக் கொண்டுதான் நடைபெறுகிறது.

இந்த ஜெனட் மருத்துவமனையிலும் இதுபோன்று பெரும் தொகையை வாங்கிக் கொண்டு முறைகேடான முறையில் பல சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு சம்பாதித்த பணத்தில் தான் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரில் பல கோடி ரூபாய் மதிப்பில் கிறிஸ்டல் என்ற பெயரில் மிக பிரமாண்ட மண்டபம் கட்டி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.