டிஜிட்டல் காலத்திலும் தபால் மரபை காத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி – பாராட்டு பெற்ற பிரசன்னா
மொபைல் போன், சமூக ஊடகங்கள் வழியாக புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் பரிமாறப்படும் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், பாரம்பரிய தபால் முறையைத் தேர்ந்தெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசன்னா.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அவர் தனது நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு தபால் மூலம் அழகிய வாழ்த்து மடல்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.
வேகமான தொழில்நுட்ப உலகில் மனிதநேயமும், உறவுகளின் ஆழமும் மறையக்கூடாது என்ற எண்ணத்தை அவரது இந்த செயல் வெளிப்படுத்துகிறது.
தபால் வாழ்த்து மடல்கள் பெறுபவர்களிடம் தனித்த உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

பழமையான தபால் சேவையின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு மரபுகளையும் மீண்டும் நினைவூட்டிய இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

