Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பெட்டிக்கடைகள் அமைத்து ஜல்லிக்கட்டுக்கு காளையுடன பிரம்மாண்ட பொங்கல் விழா .

0

'- Advertisement -

துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பிரம்மாண்ட பொங்கல் விழா .

 

நீதிமன்ற நூற்றாண்டை நோக்கி இந்த ஆண்டு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக விழா நடைபெற்றது.

 

இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல்,தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், சிலம்பம் என்று ஏகப்பட்ட போட்டிகள் நடைபெற்றன .

வெற்றி பெற்றோருக்கு துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நர்மதா ராணி அவர்கள் சான்றிதழும் பரிசுகளையும் வழங்கினார்.

 

விழாவில் பெட்டிக்கடை, டீக்கடை, பாப்கான் கடை என உண்மையாகவே செயல்பட வைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த விழாவிற்கு ஜல்லிக்கட்டு காளையும் அழைத்து வரப்பட்டிருந்தது.

விழாவிற்கு சங்கத் தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் எஸ் பி பாஸ்கரன், செயலாளர் முகமது ரஃபீக், துணைச் செயலாளர் சுடலாத்தி சிவகுமார், பொருளாளர் நரேஷ் குமார், மற்றும் இந்த விழாவிற்கு மூத்த GP சந்திரமோகன் வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார் , AS மனோகர் , SRS செந்தில்குமார், முத்துக்குமார், ஜெயராஜ், உத்திராபதி, குலாம் முகமது, பாட்சா தனசேகர், நிர்மல் கோகிலா, ரம்யா ,, அறிவழகன், கோகுல் ராஜா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.