திருச்சி துறையூர் காளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் தனசேகரன் என்பவர் தனது வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்து வரும் மாடசாமியின் மகன் அப்பாவுதுரை என்பவர் கடந்த 15 வருடங்களாக”ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ்” 10,00,000/- 1,00,000/-, 3,00,000/-, மற்றும் 5,00,000/-ஏலச்சீட்டுகள் மற்றும் தீபாவளி சீட்டு நடத்துவதாகவும் அவர் கூறிய ஆசை வார்த்தைதகளை நம்பி அவர் செலுத்திய மொத்த தொகை ரூ. 7,48,460/- என்றும் முதிர்வு காலம் முடிந்த பிறகு புகார்தாரர் கட்டிய சீட்டை கேட்டபோது தராமல் என்னையும் என்னை போல் பலரையும் ஏமாற்றியது தெரிய வந்ததால் மேற்படி நிறுவனத்தின் மீதும் உரிமையாளர் அப்பாத்துரை என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரினை பெற்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு . 01/2026 u/s 406, 420, IPC & Sec 5 of TNPID Act 1997-ன் படி வழக்குபதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
எனவே “ஸ்ரீமாரியம்மண் சிட்பண்ட்ஸ்” நிறுவனத்தினல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் காவல் ஆய்வாளர் பொருளாதார குற்றப்பிரிவு காஜாமலை மன்னார்புரம் திருச்சி அவர்களிடம் புகார் கொடுக்கலாம்.

மேலும் இவ்வழக்கில் சிட் பண்ட் நடத்தி ஏமாற்றிய அப்பாவுதுரை என்பவர் 07.01.2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த பட்டு உள்ளார்.

