பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (03.01.2026) பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், அரியமங்கலம் இண்டஸ்ரியல் சிட்கோ காலனி, ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், ராணுவகாலனி, விவேகானந்தா நகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கீழக்குறிச்சி, ஆலத்தூர்.

மகாலெட்சுமிநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், திருநகர், நத்தமாடிப்பட்டி, பொன்மலை, காட்டூர், கைலாஷ்நகர், சக்திநகர், சந்தோஷ்நகர், பாப்பாக்குறிச்சி, பாலாஜிநகர், விண்நகர், அம்மன்நகர், ராஜராஜேஸ்வரிநகர், கணேஷ்நகர், எல்லக்குடி கிராமம், செந்தண்ணீர்புரம்,
சங்கிலியாண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளது என மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

