திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெறக்கோரி மின் ஊழியர் கூட்டமைப்பு , ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெறக்கோரி
மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.
மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று திங்கள் கிழமை திருச்சி மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை விளக்கி மின்வாரிய பொறியாளர் சங்க மாநில செயலாளர் நரசிம்மன், ஏ ஐ சி சி டி யு மாநில செயலாளர் தேசிகன், ஏ ஐ டி யு சி மத்திய சங்க மாவட்ட தலைவர் நடராஜா, எம்ப்ளாயிஸ்
பெடரேசன் மாவட்ட செயலாளர் சிவசெல்வம், எல்எல்எப் பேரவை
பொதுச் செயலாளர் இளங்கோவன், மின்துறை பொறியாளர் சங்க மாநில செயலாளர் இருதயராஜ், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் ஞானம், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் சேசுராஜ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் பழனியாண்டி ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று மன்னார்புரம், கைலாசபுரம், மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை, புள்ளம்பாடி ஆகிய 6 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

