உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய நேரில் சந்தித்து பாராட்டி பரிசுகள் வழங்கி சிறப்பித்த திருச்சி மக்கள் சக்தி இயக்கத்தினர்.
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதலும், பாராட்டுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் .
கடந்த 6 ஆண்டுகளாக உடல் உறுப்பு கொடை மற்றும் உடற் கொடை வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்,நன்றி,பாராட்டுகள் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ், பயனாடை, திருக்குறள், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நூல்கள் மற்றும் பொருளாதார உதவியும் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 50ஆவது நபராக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள கல்லூரணிக்காடு என்ற ஊரில் அரவிந்தன்(வயது 46) அவர்கள் விபத்தில் மூளைச்சாவு அடைந்தினால் அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய அவர்கள் குடும்பத்தினர்களை நேரில் சென்று சந்தித்து,ஆறுதலையும், நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துடன்,
உதவித்தொகையாக ரூ10000/
பயனாடை பாராட்டுச் சான்றிதழ் *திருக்குறள்
*டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய *சொந்த காலில் நில், நூல்கள் வழங்கி,”நெகிழியை
(பிளாஸ்டிக்) தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம்” என துணிப்பையை பயன்படுத்துங்கள் என துணிப்பையும் வழங்கி நன்றி கூறி சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில்
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைச்செயலாளர்கள் இரா.இளங்கோ, வெ.இரா.சந்திரசேகர், குலேந்திரன்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

