காட்டுப்புத்தூரில்
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பெரியசாமி (வயது 19) மரம் ஏறும் தொழிலாளி. 
இவர் ஏலூர் பட்டியில் உள்ள விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறிக்கச் சென்று உள்ளார்.
அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்தார் இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.. இவ்வாறு கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து அவரது தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் காட்டுப்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

