Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: என்ன ஒரு ஒற்றுமை : 3 சம்பவங்கள். 3 செல்போன் திருடர்கள் கைது 3 செல்போன்கள் பறிமுதல், 3 பேருக்கு வலை.

0

'- Advertisement -

போலீசார் அதிரடி வேட்டை :

திருச்சியில் செல்போன் திருடர்கள் 3 பேர் கைது

3 செல்போன்கள் பறிமுதல் – 3 பேர் தப்பி ஓட்டம்.

திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோரையாறு பாலம் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் இவரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதேபோல் பிராட்யூர் பகுதியில் சரவணன் என்பவர் செல்போனையும் இரண்டு பேர் பறித்துச் சென்று தப்பி ஓடிவிட்டனர்.இந்த திருட்டு குறித்தும் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த தவசி என்கிற தவசு (வயது 23), கருமண்டபத்தைச் சேர்ந்த அர்ஜுனன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியில் செல்லத்துரை என்பவரின் செல்போனை பேசுவது போல் கேட்டு வாங்கி, திருடிவிட்டு தப்பி ஓடிய சிவகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மற்றொரு சம்பவத்தில் ஸ்ரீரங்கம் பகுதி திருவானைக்காவல் இரணியம்மன் கோவில் அருகே லோகநாதன் என்கிற முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் ..

இது குறித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய மூன்று வாலிபர்களையும் ஶ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.