திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு உறையூர் போலீசார் வலை:
திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கற்பகம் (வயது 52) .இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார்.

வேலைக்கு செல்லும்போது வீட்டை,பூட்டிவிட்டு சாவியை மின் சாதன பெட்டிக்குள் வைத்துவிட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல் அதில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீடு புகுந்து அந்த சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்று 71/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்று உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கற்பகம் உறையூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

