திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள் / விசாரணை அலுவலர்களின் துறை ரீதியான விசாரணைகளை தாமதமின்றி அரசு நிர்ணயத்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப, ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். அரசாணை எண் 417/ நிதி (ஊதியப் பிரிவு) துறை, நாள் 12.11.20-ன் படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி ஊதியத்தை 1.1. 16க்கு பின்னரும் ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, பதவி உயர்வு, ஊதிய நிர்ணயம், ஓய்வூதிய பயன்கள் கணக்கிடல் ஆகியவற்றுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம், அனுமதித்து ஆணையிட வேண்டும். ஊர்நல அலுவலர்கள் பயிற்சிக் காலத்திற்கான இரு ஊதிய உயர்வுகள் 30. 7.1992 இல் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் அனுமதித்து, ஓய்வூதிய பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர் பணிகாலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும். காலமுறை ஊதியத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக அனுமதித்து ஆணையிட வேண்டும். அரசுத்துறை (மற்றும் ) ஊராட்சி ஒன்றியம்பணி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் விடுபாடின்றி மருத்துவ காப்பீடு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியர்களின் வைப்பு நிதித் தொகைக்கான வட்டித்தொகை தாமதமின்றி அனுமதித்து விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் இன்று
வியாழக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் தெளலத் உசேன் கான்,மாவட்டத் துணைத் தலைவர் கண்ணன்,மாநில செயற்குழு உறுப்பினர் சங்கு ராஜன்,மாவட்ட இணை செயலாளர் சண்முகவேலு,ரவிச்சந்திரன்,கோட்டப் பொறுப்பாளர்கள் மணப்பாறை ஜெயராமன் லால்குடி சபூர்அலி ஆகியோர் பேசினர்.
போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் சிராஜுதீன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, டி.என். ஆர்.டி.ஓ.ஏ மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க மாநில துணைத்தலைவர் முருகேசன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.

