திருச்சி தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த
காதலியைத் தாக்கி செல்போனை உடைத்த ஆசிரியர்
கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை.
கரூர் தொழிற்பேட்டை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33 ) கரூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கரூர் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சோபனா (வயது 26. )
திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்
தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர் .பின்னர் கடந்த சில நாட்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி வந்த சக்திவேல் சோபனா பணி புரிந்து வந்த மருத்துவமனைக்கு வந்து
சோபனாவிடம் தகராறு செய்து அவரைத் தாக்கி அவரது செல்போனை நொறுக்கி விட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து சோபனா கோட்டை காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து உள்ளனர்.

