திருச்சி மொராய்ஸ் சிட்டியில் வெல்டிங் பணியின் போது 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் பலி .
திருச்சி மொராய்ஸ் சிட்டி நுழைவாயில் பகுதியில் வெல்டிங் பணியின் போது தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் பரிதாப பலி .
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்.
இவரது மகன் கௌதம் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார் .பின்னர் அவரது மாமனார் நல்லசாமி என்பவருடன் கடந்த மூன்று மாதங்களாக வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
ஏர்போர்ட் மொராய்ஸ் சிட்டி நுழைவாயில் பகுதியில் நடந்த ஒரு கட்டுமான பணியில் வெல்டிங் வேலை நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கௌதம் எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பல அளிக்காமல் கௌதம் பரிதாபமாக உயிரிழந்தார் .

இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

