Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது

0

'- Advertisement -

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது

பணம் பறிமுதல். எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடவடிக்கை .

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( வயது 35 ).இவர் திருச்சி கலைஞர் பேருந்து நிலையம் முனையத்தில் கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம பெண் சத்யாவின்கைப்பையைத் திருடி சென்று உள்ளார்.

அந்த கைப்பையில் சத்யா வெளிநாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புக் ரூ.2500 ரொக்கம் ஆகியவை இருந்துள்ளன .. இதுகுறித்து திருச்சி இளமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பூர் வீரபாண்டி ஆவாரப்பாளையம் பகுதியை சேர்ந்த கலைமணியை (வயது 45) என்ற திருடியை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்து உள்ளனர்..கைப்பையில் இருந்த பாஸ்போர்ட், பாஸ்புக் உள்ளிட்ட பொருட்களை தேடி வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.