மணப்பாறை அரசு மற்றும் கலை கல்லூரியில் தெரு நாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கள்கிழமை (15.12.2025 ) தெருநாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கிரீஸ்குமார் தலைமையில் புத்தாநத்தம் மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன் அவர்கள் தெருநாய் கடி விளைவுகள் குறித்து உரையாற்றினார்.

தமிழகத்தில் தெருநாய்க்கடித் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜெகதீசன் அவர்கள் எந்தெந்த விலங்குகள் விஷம் உடையன என்றும், குறிப்பாக தெருநாய்கள் கடியிலிருத்து பாதுகாத்துக்கொள்ள, நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
தெருநாய்கள் கடித்தால் நாமாக வீட்டுமுறை மருத்துவம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உடனடியாக மருத்துவரைப் பார்த்து முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக, வணிகவியல் துறைத்தலைவர் கி.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர்.க.மலர்மதி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
தெருநாய் மேலாண்மை ஒருங்கிணைப்பு அலுவலர், இயற்பியல் துறை பேராசிரியர் மு.பத்மாவதி அவர்கள் நன்றியுரையாற்றினார்

