திருச்சியில் இன்ஸ்டாகிராம் பழகி திருமணம் செய்த
தனியார் வங்கி மேலாளர் திருமணமான 6வது மாதத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த மகாலட்சுமி (வயது 22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன், மகாலட்சுமி கடந்த ஜூன் 8-ந் தேதியன்று மணிகண்டனைத் திருமணம் செய்துகொண்டார்.

பிறகு மணிகண்டன் கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது திருமணம் மற்றும் வீட்டுப் புனரமைப்புக்காகக் கடன் வாங்கியிருந்தார். பிறகு மணிகண்டனால் கடன் வாங்கியத்திற்கு மாதாந்திரத் தவணைத் தொகையைச் செலுத்த முடியவில்லை. மேலும் குடும்ப செலவு செய்யவும் பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்து உள்ளார். முறையாக. குடும்பம் நடத்த முடியவில்லை., மேலும் தன்னை நம்பி வந்த மனைவியையும் அவரால் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில், தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது அருகில் உள்ள மின்சாரக் கம்பி மீது விழுந்து கீழே விழுந்தார்.இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டனை உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை . சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தார்.
இது குறித்து மகாலட்சுமி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் சப் இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிவு செய்து .விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

