Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதிய 7 பேர் கைது . இவர்களுக்கு வின்னிங் தருவது யார்? திமுக கவுன்சிலர் சித்தப்பாவா ?

0

'- Advertisement -

திருச்சியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதிய 7 பேர் கைது . இவர்களுக்கு வின்னிங் தருவது யார்? திமுக கவுன்சிலர் சித்தப்பாவா ?

 

திருச்சி சென்சு கோர்ட் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் மூணாம் நம்பர் லாட்டரி எழுதிய சுந்தர பாண்டியன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேவதானப்புரம் பகுதியில் கே.எல். மூணாம் நம்பர் லாட்டரி எழுதிய ஜெகதீசன் (வயது 55) , மதுரை ரோடு பகுதியில் நம்பர் எழுதிய அப்துல் ரசாக் (வயது 49) என்பவரையும் கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்,

 

தில்லைநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சின்னசாமி நகர் பகுதியில் மூணாம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதிய முகமது சுலைமான் (வயது 55 )

 

உறையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட லிங்கநகர் பஸ் நிறுத்தம் அருகில் நம்பர் எழுதிக் கொண்டிருந்த ‘குமார் (வயது 36), புத்தூர் நால்ரோடு பகுதியில் கே எல் மூணாம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதிய செந்தில்குமார் (வயது 25) உறையூர் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 52) ஆகியோரை உறையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மேற்கண்ட 7 பேரில் ஜெகதீசன், முகமது சுலைமான், சங்கர் ஆகிய மூன்று பேரை போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்,

நேற்று முன்தினம் 25 பேர் , நேற்று ஏழு பேர் தின திருச்சி மாநகரில் இரண்டு நாட்டில் 32 பேர் லாட்டரி நம்பர் எழுதி கைதாகி உள்ளனர் . இவர்கள் அனைவருக்கும் வின்னிங் பணம் தருவது பெண் திமுக கவுன்சிலரின் சித்தப்பா என கூறப்படுகிறது . இந்த மூன்றெழுத்து பெரும் பண முதலை பலமுறை சிறை சென்றாலும் தொடர்ந்து வின்னிங் தந்து வருவதாகவும் இவரைப் போன்று இன்னும் ஒரு சில பெரும்புள்ளிகள் ஆள் பலம் , பணபலம் மற்றும் அரசியல் பின்புலத்துடன் வின்னிங் மணி ( பரிசு தொகை) தருவதாக கூறப்படுகிறது. இந்த பெரும்புள்ளிகளை முடக்கினால் இந்த சிறு வியாபாரிகள் வளர மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது .(எரிகிறது பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்”)

 

காந்தி மார்க்கெட் உள்ளேயே இரண்டு மூன்று பேர் தொடர்ந்து நம்பர் எழுதி வருவதாகவும் அவர்கள் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை எனவும் சுமைதூக்கும் பணியாளர்கள் சிலர் கேள்வி கேட்கின்றனர் .

 

திருச்சி மாநகரில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு இரண்டு நாட்களில் 32 பேரை கைது செய்து உள்ள நிலையில் புறநகரில் குறிப்பாக இனாம்குளத்தூர் , நாகமங்கலம், இலுப்பூர் , அன்னவாசல் , விராலிமலை வரை ஒரு அரசியல் பிரமுகர் தொடர்ந்து 3ம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது . மாநகர் போன்று புறநகரிலும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.