திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அன்னதானம் வழங்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள சமையல் பொருட்கள் அனுப்பி வைப்பு.
திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அன்னதானம் வழங்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள
சமையல் பொருட்கள் அனுப்பி வைப்பு.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 14 ஆண்டுகளாக சபரிமலை விழாக்காலமான கார்த்திகை 1ந் தேதி முதல் தொடர்ந்து 60 நாட்கள் அன்னதானம் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் கோனார் தோப்பில் உள்ள அன்னதான முகாமில் அன்னதானம் அளித்து வருகின்றனர்.

இந்த ஆண்டும் அதேபோல் அன்னதானம் முகாம் கடந்த நவ 17ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. ஜனவரி 1 ந்தேதி தேதி முதல் 13ந் தேதி வரை சமயபுரத்திலும் அன்னதானம் 5-வது ஆண்டாக நடைபெற உள்ளது.

சபரிமலையில் விழாகாலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக அன்னதானம் செய்து வந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக நாராயனதோடு, எருமேலி,போன்ற இடங்களில் அன்னதானம் திருச்சி மாவட்டம் சார்பாக செய்ய உள்ளோம்.
இதற்காக இன்று காலை ஸ்ரீரங்கம் அன்னதான முகாமில் இருந்து சுமார் 10 டன் எடை உள்ள மளிகை சாமான்கள், 2டன் எடை உள்ள காய்கறிகள்,மொத்தம் சுமார் 10லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் புரவலர் முரளி கொடி அசைத்து அன்னதான பொருட்களை அனுப்பி வைத்தார்.
மேலும் வெங்கடேஷ், கோபாலகிருஷ்ணன், கௌரவ தலைவர் சபரிதாசன், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ், அலுவலக செயளாலர் அம்சராம், துணைத்தலைவர்கள் முத்து, கண்காணிப்பாளர் அமைப்பாளர் ராஜகோபால், இணைச்செயலாளர்கள் ராதாகிருஷணன், இளங்கோவன், சிதம்பரம், தர்மலிங்கம், தொண்டர்படை புஷ்பராஜ், ரகுநாதன் துணைக்கண்காணிப்பாளர் சசிக்குமார், முருகானந்தம் மற்றும் மாவட்டத்தின் பிற பொறுப்பாளர்களும் சேவா சங்க கிளைகளை சார்ந்த உறுப்பினர்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

