திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் உட்பட 4 பேர் கைது .
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் கைது .

திருச்சி கே கே நகர் போலீசரகத்திற்கு உட்பட்ட ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்ரமணியபுரத்தை சேர்ந்த ராபின்சன் (வயது 34) என்பவரை கேகே நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏர்போர்ட் போலீசரகத்துக்கு உட்பட்ட காந்தி நகர் பெரியார் பூங்கா எதிரில் போதை பொருட்களை விற்பனை செய்த காமராஜர் நகரை சேர்ந்த,காந்தி நகரை சேர்ந்த காஜா ஷெரீப் (வயது 20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குட்சட் ரோடு ஆலம் தெரு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்த முகமது (வயது 26) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் –

