இதுதான் அனுபவம். ரயில்வே பொறியாளர்களால் 5 மணி நேரம் ஆகும் என்ற வேலையை 10 நிமிடத்தில் முடித்த நபர். குவியும் பாராட்டுக்கள் .
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரயில்வே கிராசிங் ஒன்றில் ஒரு சரக்கு ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல மணி நேரம் நின்றது.

ரயில்வே பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு, அந்தச் சிக்கலைச் சரிசெய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்று கூறியதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது, மனோஜ் சுக்லா என்ற பெயருடைய அந்தப் பகுதிவாசி ஒருவர் வந்தார். அவர் ரயிலில் ஏற்பட்ட கோளாறைப் பார்த்தவுடன், தனக்குப் பத்து நிமிடம் கொடுத்தால் போதுமானது என்று நம்பிக்கையுடன் கூறினார்.

அவர் ஒரே ஒரு சுத்தியலை மட்டும் கேட்டு வாங்கி, ரயிலின் சக்கரப் பகுதியை வெறும் 10 நிமிடங்களில் சரி செய்துவிட்டார். உடனடியாக ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில்வே பொறியாளர்களால் 5 மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்ட வேலையை, அனுபவமும் நம்பிக்கையும் கொண்ட ஒரு ‘லோக்கல் சாச்சா’ ஒரே சுத்தியலைக் கொண்டு சில நிமிடங்களில் முடித்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்த மாமாவுக்குப் பல பாராட்டுக்களைக் குவித்து வருகிறது..

