திருச்சியில்
ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது

திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டார். பின்னர் தனது செல்போனை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தார். அப் பொழுது அந்த நேரத்தில் அங்கு இரண்டு மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் வைத்திருந்த
செல்போனை கையில் இருந்து பிடுங்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து செல்வம் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் கன்டோன்மெண்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தபோது தீப நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 25 ) லூயிஸ் பிரிட்டோ ( வயது 19 ) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

