திருச்சி நீதிமன்றம் முன்பு இ.பைலிங் முறையை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி நீதிமன்றம் முன்பு
இ.பைலிங் முறையை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பு..
நீதிமன்றங்களில்தேவையான உட் கட்டமைப்பு வசதிகள் செய்யாமல்அமல்படுத்தப்பட்டுள்ள
இ பைலிங் முறையை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று திங்கட்கிழமை காலை
திருச்சி நீதிமன்றம் முன்பு திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.
போராட்டத்துக்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க செயலாளர் சி.முத்துமாரி தலைமை தாங்கினார்.


துணைத் தலைவர் வடிவேல் சாமி முன்னிலை வகித்தார். இணை செயலாளர் விக்னேஷ்,பொருளாளர் சதீஷ்குமார்,
பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார்,
குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் வரகனேரி சசிகுமார், இரா பிரபு, முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன்,
மூத்த வழக்கறிஞர் மீரா மைதீன், தினகரன்,
மதியழகன், முத்துகிருஷ்ணன்,
கௌசல்யா, சுகன்யா ,வனஜா,ஆதிநாராயணன்,
வெங்கட்ராமன், முருகானந்தம், மோனிகா ,கோபிநாத்,
சந்திரமோகன், சந்தோஷ்குமார்,
தீனதயாளன், சிற்றரசு கண்ணன், திருமுருகன் ஸ்ரீதர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கொண்டு கோஷங்கள் எழுப்பினார் .

