நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் துணிகரம் :
நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் துணிகரம் :
நடந்து சென்ற பெண்ணிடம்
2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
2மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி கோட்டை மேல சிந்தாமணி காவேரி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா ( வயது 52) .இவர் காவேரி பார்க் பகுதியில் தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கவிதா கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை எல்லாம் ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் இரண்டு மர்ம நபர்கள் பெண்ணின் செயினை அறுத்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

