ஆட்சியை வலுப்படுத்த உறுதி ஏற்போம் . பொன்மலைப்பகுதி சார்பில் நடைபெற்ற துணை முதல்வர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .


திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக திமுக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். :
DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது

அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட பொன்மலை பகுதியின் சார்பாக பொன்மலை கீழக்கல் கண்டார்கோட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் #DCM07 கழக இளைஞரணிச் செயலாளர்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
37 வட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்பு உரையாற்றினார் .
பகுதி செயலாளர்
இ. எம். தர்மராஜ் பொது கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ,
மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் தலைமை கழக பேச்சாளர் மணப்பாறை
துரை. காசிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் .
இறுதியாக வட்ட செயலாளர் தமிழ் மணி நன்றியுரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில் வட்டக் கழக செயலாளர் முருகாளந்தம் , தமிழ்மணி , பரமசிவம், முருகன்,
நாகவேணிமாரிமுத்து ,மனோகர் ,
மரியஅடைக்கலம், வரதராஜன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையில் பேசிய போது :-
அதானி அம்பானி வாங்கிய கோடிக்கணகான கடன்களை தள்ளுபடி செய்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார் ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி
உதயநிதி 48
மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக உதயநிதி 48 என்னும் நிகழ்வில் ஏழாவது நிகழ்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெற்று வருகிறது 2026 இல் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமையும் என நாம் இந்த நிகழ்வில் மூலம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றும் மேலும் நான் 2016 மற்றும் 2021 இல் தேர்தலில் நின்ற பொழுது எனக்கு வாக்கு சேகரிக்க வந்த துணை முதல்வர் அவர்கள் நான் அன்பிலிற்காக ஓட்டு கேட்க வரவில்லை எனக்காக உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன் என்று கூறியவர் தான் துணை முதல்வர் என்றும் நமது திருவெறும்பூர் தொகுதியில் மாதிரி பள்ளி மற்றும் ஒலிம்பியாட் விளையாட்டு மைதானம் சூரியுர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் என அமைத்து தந்தவர் தான் தமிழக துணை முதல்வர் என்றும் மேலும் இந்த பொன்மலை பகுதியில் இதுவரை ரூபாய் 42 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து பணிகளும் நடைபெற்று முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்றும் எடுத்துரைத்தார் மேலும் நமது தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் துயர் தீர்க்கும் வண்ணம் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரி படிப்பை தொடர அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் என்னும் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாகவும், மேலும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் விடியல் பயணம் மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்கள் வகுத்து மக்களுக்காக செயல்படும் ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து அதானி மற்றும் அம்பானியின் கடன்களை தள்ளுபடி செய்து கொண்டிருப்பவர் தான் ஒன்றிய பிரதமர் மோடி என்றும் எடுத்துரைத்தார் பாரத பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை 15 ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் எடுத்துரைத்தார் எனவே மக்களாகிய அனைவரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியை வலுப்படுத்த நாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதி ஏற்போம் எனவும் எடுத்துரைத்தார்

