திருச்சி பீமநகரில் குடிபோதையில்
வாலிபர் மீது தாக்குதல்
2 பேர் கைது . பெண் மீது வழக்கு பதிவு .

திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராம் (வயது 26). இவர் பஞ்சு கிடங்கு மதுரை வீரன் மாரியம்மன் கோவில் முன்புறம் தனது போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் .

அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது நசீர் (வயது 48 ,சாரதி (வயது 19 ) ஆகியோர்
அவரிடம் தகராறு செய்து அவரை மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது நசீர் மற்றும் சாரதி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர் .

மேலும் இந்த சம்பவத்தில் 36 வயது பெண்மணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

