குடிநீர், சுகாதாரம், பஸ் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள்:

ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு சிறப்பு பாஸ் கிடையாது
திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி கோவிலில் வருகின்ற 19-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி மாதம் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

21 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 20-ந் தேதி அன்று பகல் பத்து உற்சவம் தொடங்க உள்ளது மற்றும் 30-ந் தேதி இராப்பத்து உற்சவத்தின் முதல் திருநாள் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.
உற்சவ நாட்களில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இன்று கோயில் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முன்னேற்பாடு பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர்.காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சிபின், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் .சிவராம் குமார், ஞானசேகரன் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை உணவுத்துறை தீயணைப்பு துறை மின்சாரத்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் இந்த ஆண்டு கூடுதலாக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் கேட்டறிந்தனர்..
இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று கருதப்படுகிறது அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறையோடு இணைந்து அனைவரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
சிறப்பு அனுமதி டிக்கெட் திருக்கோவிலில் கிடையாது என சட்டசபையில் அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்காக கடந்த ஆண்டு 700 ரூபாய் மற்றும் 4000 ரூபாய் வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் இந்த ஆண்டு கிடையாது அதற்கு பதிலாக விஐபிகளுக்கு மட்டும் மாற்று பாஸ் வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதற்கு ஏற்றார் போல் பாஸ்கள் வழங்கி விஐபிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.
மேலும் குறிப்பாக பக்தர்களுக்கு தேவையான பார்க்கிங் வசதி கழிப்பட வசதி குடிநீர் வசதி போன்றவற்றை கூடுதலாக வைக்கவும் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

