பள்ளியை உரசி சரி செய்து செல்லும் மின்சார ஒயரை நீங்களே கொள்ளுங்கள் என தெனாவட்டாக கூறும் மின்வாரிய அதிகாரிகள் . நடவடிக்கை எடுக்கப்படுமா ?

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி வளாகத்தின் எதிர்ப்புறம் மின் கம்பம் ஒயர் தாழ்வாக செல்கிறது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பின் ஒயர் செல்கிறது என மின்வாரியத்தில் புகார் அளித்தும் மின் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அச்சத்துடன் பள்ளி சென்று வருகின்றனர் .

ஆபத்தான நிலையில் இருப்பதால் ஊர் பொதுமக்கள் பயந்து வருகிறார்கள். பல முறை மின் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை கேட்டால் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை நீங்களே சரிபடுத்திக் கொள்ளுங்கள் என மிகவும் அசால்டாக பதில் கூறுகிறார்களாம் மின்வாரிய அதிகாரிகள்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்களா ?
என பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் . சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

