

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் இன்று உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை யூத் ரெட் கிராஸ் சார்பாக உலக எயிட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும் பொறுப்பு முதல்வருமான
முனைவர் கா வாசுதேவன் அவர்கள் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.
பேரணி கல்லூரி முகப்பில் ஆரம்பித்து மன்னார்புரம் சிக்னல் வரை நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளைப் பிடித்துக் கொண்டும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களைக் கூறிக் கொண்டும் சென்றனர் பெரியார் கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ் பொறுப்பாளருமான முனைவர் இரா.குணசேகரன் பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்,

நிகழ்வில் பேராசிரியர்களும் 300 க்கும் மேற்பட்ட.மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்

