
திருச்சி சென்னை – பைபாஸ் சாலையில்
பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வாலிபர் பலி

போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. .
திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெரு, நல்லையன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 45) .
இவர் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் பால் பண்ணை மேம்பால நுழைவு பகுதியில்
சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ரிச்சர்ட் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
காரை ஓட்டி வந்த கே.கே.நகர் ஓலையூர் திருமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர பாண்டியன் ( வயது 29 ) என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்..

