திருச்சியில்
போதை மாத்திரை விற்ற ரவுடியுடன் ஒருவர் கைது .
திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் கோட்டை காவல் நிலைய போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது இரண்டு பேர் சந்தேத்திற்கிடமாக சுற்றி திரிந்து வந்துள்ளனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது இரண்டு பேரும் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்து உள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது எடமலைப்பட்டி புதூர் ஆர் ஜே நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 45 ) சுண்ணாம்பு காரத் தெருவை சேர்ந்த கணேஷ் (வயது 42) என்பது தெரியவந்தது .
இதையடுத்து கோட்டை காவல் நிலைய போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் பாலமுருகன் சரித்திர பதிவேட்டு ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

