வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என் கூறி
ரூ 10 லட்சம் மோசடி செய்த பெண்.
மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சத்திரம் பகுதி சேர்ந்தவர் கோபிநாத் (வயது 33) இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ரெயில்வே துறையில் பணியாற்றும் டிடிஆர் ஒருவர் அறிமுகமானார். மேலும் இவர் தனக்கு கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அறிமுகம் செய்து அவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின்
பெண் உதவியாளர் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கோபிநாத்யிடம் மேற்கண்ட 2 பேரும் தங்கள் மூலம், சுங்கத்துறை அல்லது போலீஸ் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இவர்கள் கூறிய வார்த்தையை நம்பி கோபிநாத்,டிடிஆர் யிடம் ரூ 6 லட்சம் பணமும், அமைச்சரின் பெண் உதவியாளர் என்று கூறிய நபரிடம் ரூபாய் பத்து லட்சம் பணமும் கொடுத்து வேலை கேட்டிருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்கள் ஆகி வேலை வாங்கி தராததால் கோபிநாத் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பின்னர் டிடிஆர் ரூபாய் 6 லட்சம் பணத்தை திருப்பி தந்து விடுகிறார்.
ஆனால் அந்த பெண்மணி ரூ. 10 லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து கோபிநாத் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் . புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

