Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் தொடக்கம். பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் பாதிப்பு

0

'- Advertisement -

திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் தொடக்கம்.

 

வடமாநிலத்தவர்ரை வேலையில் சேர்க்க முயன்றதால் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள், தங்களுக்கு சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், 2022-ம் ஆண்டில் 10 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணிசெய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்காக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் அறிவித்து இருந்தது.

 

இந்நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் திடீரென்று வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களை அங்கு அழைத்து வந்து சுமை தூக்கும் பணியில் ஈடுபடுத்த முயன்றனர். இதனைப் பார்த்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வட மாநில தொழிலாளர்களை அனுப்பி வைத்தனர். பிறகு டிஎன்சிஎல்சி சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

 

தகவல் அறிந்து சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் கூறும்போது, எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். திருச்சி மாவட்டத்தில் மட்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான 7 குடோன்களில் பணியாற்றி வரும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ள்ளனர் என்று கூறினார்

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள

ரே‌சன் கடைகளுக்கும், சத்துணவு மையங்களுக்கும், சிறைச்சாலை மற்றும் காப்பகங்களுக்கும் பொது வினியோக திட்ட பொருட்கள் வினியோகம்செய்யும் பணி பாதிக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.