திருச்சி கே கே நகரில் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில்
சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி கே.கே .நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) இவர் எல் ஐ சி காலனி, வெங்கடேஸ்வரா தெருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி முதல் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது .
இந்த நிலையில் இவர் தனது மனைவியிடம் கூறிவிட்டு அலுவலகத்திற்கு சென்றவர் கதவை தாளிட்டு அலுவலகத்தில் உள்ளையே தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் அவரது மனைவி கௌரி (வயது 45 ) அலுவலகத்திற்கு வந்து கதவைத் தட்டிய போது உள்பக்கம் தாளிட்டு கதவு திறக்கப்படாததால் கேகே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு வந்த கேகே நகர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது
இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

