திருச்சி வி.என்.நகரில்
குளியலறையில் வழுக்கி விழுந்து 80 வயது முதியவர் பரிதாப சாவு
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
கரூர் மாவட்டம் குளித்தலை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 80).இவர் தற்போது திருச்சி வி.என்.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள் ஹேமலதாவின் வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று குளியலறைக்கு சென்ற இவர் குளியலறையில் மயங்கி விழுந்தார்.உடனே அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது மகள் ஹேமலதா அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி,பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

