வ.உ.சி மக்கள் நல இயக்கம் வ.உ.சி அறக்கட்டளை சார்பில் , வ. உ. சிதம்பரம் பிள்ளையின் குரு பூஜையை முன்னிட்டு முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி நாயகன் எஸ்.வி.சிவா பிள்ளை தலைமையில், மாலை அணிவித்து மரியாதை.
வ.உ.சி மக்கள் நல இயக்கம்
வ.உ.சி அறக்கட்டளை சார்பில் சுதந்திர போராட்ட தியாகி
, வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89 ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை கடந்த 18ஆம் தேதி அன்று இளைஞர்களின் எழுச்சி நாயகன் எஸ்.வி.சிவா பிள்ளை அவர்கள் தலைமையில், மதியம் 1.00 மணி அளவில் ஊர்வலமாக சென்று, திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ உ சி யின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி இருசப்பிள்ளை, நாஞ்சுர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எம்.எம். பழனிசாமி, கண்ணாங்குடி பிரபா, நேருஜி, வழக்கறிஞர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

