22-ந் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வீரமங்கை தடகளப் போட்டிகளில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்
22-ந் தேதி நடக்கிறது –
-அகில இந்திய தடகளச் சங்கம்,
மத்திய விளையாட்டு சம்மேளனம் சார்பில்
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்.
அகில இந்திய தடகள சங்கமும், மத்திய விளையாட்டு சம்மேளனமும் இணைந்து ‘அஸ்மிதா'(வீரமங்கை) தடகள போட்டிகளை நடத்துகிறது.
இப்போட்டியானது நாட்டில் உள்ள, 300 மாவட்டங்களை தேர்வு செய்து அந்தந்த மாவட் டங்களில் உள்ள, 14 மற்றும், 16 வயதுடைய மாணவியருக்கு தனியாக தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில், 60மீ, 600மீ,ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெறுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், ஊக்கத்தொகையும் வழங் கப்படவுள்ளது.
திருச்சியை பொறுத்தவரை வரும், 22-ந்தேதி அண்ணா ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது.
இதில் பங்குபெறும் பள்ளிகள், சங்கங்கள், தடகள சம்மேளனம் தங்களது பதிவுகளை https://account.kheloindia.gov.in/#/athlete-signup என்ற மின்னஞ்சல் முகவரி, தங்கள் விபரங்களை, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய முடியாத நபர் 9965473330 (or) 8680808268 தொடர்பு கொள்ளவும்.
எனவே, அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் மாணவியரின் பெயர்களை முன்பதிவு செய்து, தடகள போட்டியில் பயன்பெற நடவடிக்கை எடுக்குமாறு, திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு கேட்டுக்கொண்டுள்ளார்.

