ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் பரிதாப சாவு.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (வயது 57)
இவர் ஸ்ரீரங்கம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்தார்.
கடந்த 17 ந்தேதி இவர் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் பழுது பார்க்க ஏறினார்.அப்பொழுது அவர் சுமார் 15 அடி உயரத்தில் ஏறிய பொழுது திடீரென்று தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
இந்த சம்பவத்தில் கீழே விழுந்ததில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சோலை ராஜன் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சோலை ராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சோலை ராஜின் மனைவி பரமேஸ்வரி ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அப் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

