சிறு மற்றும் மொத்த வணிகர்களுக்கு பஞ்சப்பூர் காய்கனி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கித் தர வேண்டும். திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் கலெக்டரிடம் மனு .
பஞ்சப்பூரில் கட்டி வரும்
புதிய காய்கனி மார்க்கெட்டில்
காந்தி மார்க்கெட் சிறு,மொத்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க வேண்டும்
கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் மனு .
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தலைமையில் செயலாளர் மூர்த்தி
பொருளாளர் சபி அகமது கூடுதல் செயலாளர் மந்தை ஜெகன் துணைச் செயலாளர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் சரவணன் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு எதிரே பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி சுமார் 22 ஏக்கரில் கட்டுமான பணி நடந்து வருகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிறு மொத்த வியாபாரிகள் 2000 பேர் உள்ளனர்.

இவர்கள் காந்தி மார்க்கெட்டில் தரைக்கடைகள், செட் அமைத்த கரைக்கடைகள் உள் வாடகை கடைகள் போன்றவற்றில் வணிகம் செய்து வருகின்றனர்.
இந்த வணிகர்களின் வருங்கால தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறு மற்றும் மொத்த வணிகர்களுக்கு பஞ்சப்பூர் காய்கனி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கித் தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

