Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எங்களை அழைத்துப் பேசாமல் நடைபெற்று வரும் பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் பணியால் 2000 மொத்தம் மற்றும் சில்லறை. வியாபாரிகளின் பொருளாதாரம் கேள்விக்குறியாக உள்ளது . எனவே போராட்டம் நடத்த காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்…

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில், தனரத்தினம் நகர் வலீமா ஹாலில், சங்க தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது.

 

செயலாளர் என்.டி.கந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் ஜி.வெங்கடாசலம், வி.எம்.கண்ணதாசன், எஸ்.எம்.டி.முகமது சபி, கே.டி.தங்கராஜ், யூ.எஸ்.கருப்பையா, ஏ.தங்கராஜ், எஸ்.பி.பாபு மற்றும் முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

 

இக்கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் கீழ் வருமாறு ….

 

1. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆட்சியர் சரவணன் ஆகியோரிடம் நமது காந்தி மார்க்கெட் மற்றும் பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் சம்பந்தமாக நேரில் மனு கொடுத்து விளக்கம் கேட்டதில், நமது காந்தி மார்க்கெட் 6.40 ஏக்கர் எக்காலத்திலும் இடமாற்றம் செய்யப்படாது, தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்றும், ஒருசேர கூறியதற்கு நன்றி தெரிவிப்பதுடன், அதே சமயம் பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் யாருக்காக, எதற்காக கட்டப்படுகிறது என்ற நமது கேள்விக்கு முறையான பதில் தராமல் அது யாருக்கு வேணும் என்றாலும் டெண்டர் முறையில் கொடுப்போம். அதே சமயம் மார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்போம் என்ற பதில் கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

 

2. பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பணி தொடங்குவதற்கு முன் கடந்த ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் 7.5.2025 அன்று வியாபாரிகள் உங்கள் அனைவரையும் அழைத்து பேசி உங்கள் விருப்பப்படி தான் கடைகளின் அளவு எண்ணிக்கை போன்றவை கணக்கில் கொண்டு கட்டுமான பணி தொடங்குவோம் என்று கூறிவிட்டு, தற்போது வரை எங்களை அழைத்து பேசாமல், பஞ்சப்பூர் புதிய காய் கனி மார்க்கெட் பணி வெகு விரைவாக நடைபெற்று வருவது, எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்றும், எங்களது பொருளாதாரம் மிகுந்த கேள்விக்குறியாக இருக்கிறது என்பதையும் இந்த கூட்டத்தின் வாயிலாக வருத்தத்தை பதிவு செய்கிறோம்.

எஸ் ஐ ஆர் தேர்தல் பணிகள் இருப்பதால் 10 அல்லது 15 நாட்களுக்குள் காந்தி மார்க்கெட் அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் அழைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் அவசியம் நடத்துவதாக, நமது திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் எங்கள் அனைவரையும் அழைத்து கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

3. இரண்டு வாரங்களுக்குள் எங்களை அழைத்து பேசவில்லை என்றால் காந்தி மார்க்கெட் வியாபார அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதையும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.