திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை அதாவது 17.11.25 முதல் 14.01.26 வரை தொடர்ந்து 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவும், ஓய்வெடுத்து செல்லவும் அவர்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ உதவி செய்யவும் வசதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள K K S மாமுண்டி கோனார் தோப்பில் 15 ஆம் ஆண்டாக அன்னதான சிறப்பு முகாம் இன்று துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அன்னதான கொடியை மாவட்ட போஷகர் N. V. முரளி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் குத்து விளக்கை அகில பாரத ஐயப்ப சங்கத்தின் மாநில தலைவர் M. விஸ்வநாதன் அவர்களும் திண்டுக்கல் புவனேஸ்வரி மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனாநந்த சஸ்வதி ஸ்வாமிகள் அவர்களும் ஏற்றி வைக்க, அன்னதான முகாமை வீரவநல்லூர் குலசேகர ராமானுஜம் மடத்தைச் சார்ந்த ஸ்ரீ ஸ்ரீ ஆப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தார்.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் K. ஐயப்பன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். K R T ஷோரூம் நிறுவனர் வெங்கடேஷ் மருத்துவ முகாமை துவக்கி வைக்க K K S மாமுண்டி கோனார் தோப்பு உரிமையாளர் M. B. கோபாலகிருஷ்ணன் உணவுக்கூடத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கௌரவ தலைவர் சபரிதாசன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ், அலுவலக செயலாளர் அம்சராம், மாவட்ட உதவி தலைவர்கள் முத்து, ராஜகோபால் இணைச் செயலாளர்கள் இளங்கோவன், சிதம்பரம், சரக தொண்டர் படை தளபதி பாலகிருஷ்ணன், ரகுநாதன் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியனின் பல்வேறு நிர்வாகிகளும் சிறப்பாக செய்து இறந்தனர் .

