மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து
இரண்டு வீடுகளில் தங்க நகை,வெள்ளி பொருட்கள் கொள்ளை
மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை வீச்சு.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொட்டப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது பக்கத்து வீட்டுக்காரர் ராஜேந்திரன் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர் .
அப்பொழுது
நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டில் பின்பக்க கதவை மர்ம
ஆசாமிகள் சிலர் உடைத்து உள்ளே புகுந்தனர் பிறகு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஐந்து பவுன் நகையை திருடி கொண்டு பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகம் வீட்டுக்கு சென்றனர். ஆறுமுகம் வீட்டின் முன் பகுதி கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டின் அறையில் இருந்த வெள்ளி பொருட்களை திருடி க்கொண்ட மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து ஆறுமுகம், ராஜேந்திரன் இருவரும் மணப்பாறை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து மணப்பாறை டிஎஸ்பி காவியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன், ஆறுமுகம் வீட்டிற்குள் புகுந்து தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து இரண்டு பேரின் வீடுகளில் புகுந்து அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொள்ளை சம்பவம் நடந்தது கொட்டப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

