Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: டிடிவி தினகரனை அருவருக்க தக்க வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர் கைது .

0

'- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை, தனது சமூக வலைதள பதிவில் யூ டியூபர் சாட்டை துரைமுருகன் தொடர்ந்து அவதூறாக பேசிவருவதாக குற்றம்சாட்டி, திருச்சி சண்முகா நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள சாட்டை துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அமமுக கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

 

அரசியல் நாகரிகம் இல்லாமல், அருவருக்கத் தக்க வகையில், அவதூறாக வெளியிட்ட பதிவுகளை உடனே நீக்க வேண்டும். அவதூறு பரப்பிய சாட்டை துரைமுருகனை கைது செய்ய வேண்டுமென முழக்கம் எழுப்பினார்கள்.

 

போராட்டம் நடத்தியவர்கள் எனது உறவினர்கள், அவர்களை நான் சமாதானப் படுத்தி கொள்கிறேன் என்று போலீஸாரிடம் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

 

சாட்டை துறைமுருகனின் வீட்டை முற்றுகையிட்டு அமமுகவினர் போராட்டம் நடத்தப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், சாட்டை துரைமுருகன் வீட்டிற்கு இன்று காலை முதல் பாதுகாப்பு வழங்கினார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.