அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் குழந்தைகள் தின விழா கோலாகலக் கொண்டாடடம் .
நம் எண்ணங்களில் என்றும் நிறைந்து இருக்கக்கூடிய பாரத பிரதமர் நேரு அவர்களின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே.
அந்த வகையில் அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் நேற்று (14.11.2025 ) குழந்தைகள் தினவிழா
கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளி முழுவதும் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது..
இந்த இனிய நாளின் முதல் நிகழ்வாக பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பூரண கும்ப வரவேற்பு அளித்தும் மலர்கள் தூவியும் மாணவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக மாணவத் தலைவர்கள்
குத்துவிளக்கேற்றி
விழாவிற்கு மேலும் ஒளி கூட்டினர்.
விழாவிற்கு முத்தாய்ப்பாக மாணவர்கள் அனைவரும் குழுமி நின்று வண்ண வண்ண பலூன்களை வானத்தை நோக்கிப் பறக்கவிட்டு “விண்ணைத் தாண்டி வருவோம்” என்று தங்களின் கனவிற்கு வண்ணம்
தீட்டினர்.



பள்ளியின் தலைமை ஆசிரியர் ,
ஆசிரியர்கள், செல்வராஜ் அவர்கள்
ஆகியோர் சார்பில் மாணவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
மாணவர் மனங்களில் மகிழ்ச்சியை
வாரி இறைத்த
இந்த இனிய கொண்டாட்டத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழுவினரும்
ஊர்ப் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி சென்றனர்.

